10004 பல்துறை அறிவுக் கலசம்.

வி.ரி.வேலாயுதம். கல்கிசை: வி.ரி.வேலாயுதம், 5யு, ஜனதா மாவத்தை, மவுண்ட் லவீனியா, 1வது பதிப்பு, ஆவணி 2011. (கொழும்பு: யு.வு.வெளியிட்டகம்).

155 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 140., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53859-0-9.

யோக ஆசனங்கள், தியானப் பயிற்சி, மூலிகை வைத்தியமும் தேகாரோக்கியமும், நீரிழிவு, அதிசயம் ஆனால் உண்மை (மூளை, மயிர் எவ்வாறு புல்லரிக்கிறது?, இரத்த தானம், நாக்கு, தேயிலை, நாவல்பழம், பக்டீரியா, பொரித்த எண்ணெய் ஆகியன பற்றி தகவல்கள்), கோவில் வழிபாடு, ஆலய வரலாறு (திருநெல்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலய வரலாறு, திருநெல்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம சுவாமி கோவில், வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில், கோப்பாய் கிருஷ்ணர் கோவில், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில்), விரதங்கள், முன்னோர் அருளியது, பொதுவுள அறிவு, உண்மையானதே (தாஜ்மஹால் ஏன் கட்டப்பட்டது, மீனின் சுவாசம், மண்புழு, சோப் தேவையா, குன்றுகளையும் பெரிய பாறைகளையும் உடைப்பது எப்படி?), பிறந்தநாள் தேவையா?, தவிர்க்க வேண்டியன, வேறு-மிளிற வழியுண்டா? (விசர்நாய் கடித்ததா? சீழ் ஏன் வெண்மையாக உள்ளது, உடலின் எடை குறைய நீர் அவசியம், தன்னம்பிக்கை உண்டா?) பிரபஞ்சத்தினுள்ளே, சிந்திக்க வேண்டியது (நமக்கு எல்லாம் தேவை தானா? நம்மை நாமே ஏமாற்றலாமா? உலகமே மாயை, துயரம் ஏன்?, எங்கே நிம்மதி? பணம் தேவையா?), மகிழ்வுடனும் வளமுடனும் வாழக் குட்டிக் கதைகள் எனப் பல்வேறு தலைப்புகளின்கீழ் உடல்நலமும் கல்வி வளர்ச்சியும், தன்னம்பிக்கையும் வழங்கும் பல்வேறு தகவல்களையும் ஆலோசனைகளையும் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54538).

ஏனைய பதிவுகள்