10006 பொது நுண்மதி.

பிரியா பாலேந்திரன். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

ஐ க்யூ எனப் பொதுவாக குறிப்பிடப்படும் நுண்மதி, Intelligence Quotients என்னும் விரிவுச்சொல்லாகும். இத்துறை இன்று உலகெங்கும் மனிதனது உளவாற்றலை அளவிட உதவும் கலையாக வளர்ந்துள்ளது. விவேக ஈவு என்றும், நுண்மதி ஈவு என்றும் தமிழில் வழங்கப்படும் இத்துறை ஒருவரின் உளவாற்றலை மதிப்பிட உதவும் ஒரு எண்மதிப்பீடாகும். இந்நூல் பொது நுண்மதி பற்றிய பயிற்சிகளை உள்ளடக்குகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 155424).  

ஏனைய பதிவுகள்

13A09 – சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்), யாழ்ப்பாணம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, ஆடி 1912, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: வித்தியாநுபாலனயந்திரசாலை). 182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,