வி.கந்தவனம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1976. (யாழ்ப்பாணம்: சக்தி அச்சுக்கூடம், ஸ்ரான்லி வீதி).
iv, 28 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 18×12.5 சமீ.
இரசிகமணி கனக செந்திநாதனின் ஆக்கங்களின் பட்டியல். 10.11.1976 அன்று குரும்பசிட்டியில் யாழ். இலக்கிய வட்டத்தினால் எடுக்கப்பட்ட இரசிகமணியின் மணிவிழாவையொட்டி அவரது படைப்புக்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அவரது எழுத்தாற்றல் சிந்தனை, மனப்பாங்கு, எழுத்தளாவிய பல்துறைப் பரப்பு என்பவற்றை இத்தொகுப்பின் வழியாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155730).