10014 தூயி தசாம்ச பகுப்பாக்கம்: பிரயோக அணுகல்.

உதித்த அழகக்கோன் (சிங்கள மூலம்), எம்.எஸ்.எம்.ஷிஹாம் (தமிழாக்கம்). கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல.14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 10: சமயவர்த்தன பிரின்டர்ஸ், 53, ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல மாவத்தை).

xiii, 118 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8383-35-X.

Practical Approach to DDC என்ற தலைப்பில் பாண்டே கே.எஸ். சர்மாவின் ஆங்கில நூலைத் தழுவி சிங்கள மொழியில் எழுதப்பட்ட உதித்த அழகக்கோனின் நூலின் தமிழாக்கம் இதுவாகும். நூலகங்களில் தூயி தசாம்சப் பகுப்பு (Dewey Decimal Classification) முறையின் 21ஆம் பதிப்பினைப் பின்பற்றி தமது நூல்களை வகுப்பாக்கம் செய்யும் நூலக ஊழியர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல், வகுப்பாக்கம் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்திசெய்யும் வகையில் பயிற்சிகளுடன் கூடியதாக அமைந்துள்ளது. தூயி தசாம்சப் பகுப்பாக்கம், உறவுச் சுட்டி, தூயி தசாம்சப் பகுப்பாக்கத்தின் முக்கிய பிரமாணங்கள் மற்றும் குறிப்புகள், துணை அட்டவணைகள், உப பிரிவுகளுக்குச் சில துணை அட்டவணைகளிலிருந்து எண் சேர்த்தல், குறியீட்டெண்ணாக்கத்தின்போது விசேட கவனம் செலுத்தவேண்டிய பகுதிகள், பலபொருள் நூல்களைப் பகுப்பாக்கம் செய்தல், சொல்லகராதி ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50316).

ஏனைய பதிவுகள்

13198 ஆன்மீகப் பொய்கை: கட்டுரைத் தொகுதி.

கல்வயலூர் ஆர்.வீ.கந்தசுவாமி. யாழ்ப்பாணம்: திருமதி யோகபாக்கியம் கந்தசுவாமி, இல.819/1, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2016. (மிருசுவில்: மாதுளன் பதிப்பகம், உசன்). xvii, 182 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14.5