14238 விநாயகசட்டிப் புராணம்.

நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், முன்னேஸ்வரம், 1வது பதிப்பு, நவம்பர் 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2டீ, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). viii, 40 பக்கம், புகைப்பட தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×45 சமீ., ISDN: 978-955-0877-62-1. மூலநூலாசிரியர் நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். வரகவி எனவும் நாவன்னா எனவும் சிறப்புப் பெற்ற தமிழ்ப் புலவர் இவர். அவரது பதிக்கப்படாததும் பனை ஓலைச்சுவடி வடிவிலேயே இன்றும் இருக்கும் விநாயகசட்டிப் புராணமான இந்நூல், நவீன கணனி வசதியுடன் ஏட்டுச் சுவடிகளை உள்ளபடி புகைப்படப் பிரதியாக்கம் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. 240 ஏட்டுப் பக்கங்கள் பக்கத்துக்கு ஆறு ஏடுகளாக 40 பக்கங்களில் பிரதியெடுக்கப்பட்டுள்ளன. நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் தென்கோயிற் புராணம் 12600 விருத்தங்களுடனும், விநாயகசட்டிப் புராணம் 1600 விருத்தங்களுடனும் பாடப்பெற்று பனை ஓலைச் சுவடிகளாகவே முன்னேஸ்வர ஆலயத்தில் பேணப்பட்டு வருகின்றன. 14 நூல்களின் ஆசிரியரான இவரது ஆக்கங்களுள் கந்தசஷ்டிப் புராணம் 1895இல் முதற்பதிப்பாக வெளிவந்தது. பதிப்பாசிரியர் பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் ஸ்ரீமுன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் பிரதமகுருவும் தர்மகர்த்தாவுமாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறையின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்