10021 இனிய நந்தவனம்: சசிபாரதி 80: முகமூடி இல்லாத மனிதர்.

த.சந்திரசேகரன் (ஆசிரியர்). திருச்சி 620 003: இனிய நந்தவனம், எண் 18, பெரிய செட்டித் தெரு, உறையூர், 1வது பதிப்பு, அக்டோபர் 2010 (திருச்சிராப்பள்ளி 620003: புதிய சித்திரா அச்சகம், இல. 5, மிஷன் வைத்தியசாலை வீதி, உறையூர்).

64 பக்கம், விலை: இந்திய ரூபா 10., அளவு: 21×14 சமீ.

தமிழகத்திலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத இதழின் சிறப்பிதழாக முத்துவிழாக்காணும் ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி சு.சபாரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக இம்மலர் வெளிவந்துள்ளது. 10.10.2010 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள ஹோட்டல்  காஞ்சனாவில் இடம்பெற்ற முத்துவிழா நிகழ்வையொட்டி இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. சஞ்சிகையின் வழமையான அம்சங்களுடன் ஈழநாடு தந்த மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி பற்றிய பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. சசிபாரதி ஒரு சகாப்தம் (த.சந்திரசேகரன்), சசிபாரதியை மறக்கமுடியுமா என்ன? (ம.வ.கானமயில்நாதன்), சபாவும் நானும் (ஈ.வீ.டேவிட் ராஜு), சசிபாரதி முகமூடி இல்லாத மனிதர் (ஜவஹர் ஆறுமுகம்), சபா அண்ணர் (எஸ்.எம்.வரதராஜன்), என்னுயிர் நண்பா வாழிய நீடே-கவிதை (ம.பார்வதிநாத சிவம் ), ஒரு எழுத்தாளனின் பேனாமுனையிலிருந்து (வவனியூர் இரா உதயணன்), என் முதிய நண்பரே (யாழூர் துரை),  ஊடகத்துறையை உளமார நேசித்தவர் (இரத்தினம் கந்தசாமி), மனிதநேயமும் விருந்தோம்பலும் மிக்கவர் சசிபாரதி (ஈ.ஆர்.திருச்செல்வம்),  சசி பாரதியுள் சபா (வே.த.யோகநாதன்), முத்திரை பதித்தவர் (கலைச்செல்வி-சிற்பி சிவசரவணபவன்), மறக்கமுடியாத நல்ல அனுபவங்கள் (க.கணேசலிங்கம்), உயிருள்ளவரை என்னுள் வாழ்வார் (ஈ.கே.ராஜகோபால்), வாழ்க பல்லாண்டு- கவிதை (திருச்சி சி.சுப்பராயன்), வாருங்கோ வாருங்கோ (சொர்ணபாரதி), புகழ் விரும்பாத பத்திரிகையாளன் (பற்றிமாகரன்), என்அப்பா ஒரு கொடைவள்ளல் (மாலதி ரவிக்குமார்), மிகச்சிறந்த பத்திரிகையாளன் (கல்லாறு சதீஷ்) ஆகிய பல்துறையினரின் மனப்பதிவுகளை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Three card Poker On the web

Articles Casino Astro Cat Rtp | Game business and specialist options Gamble Alive Broker Poker Digital Truth (VR) and you can Augmented Reality (AR) Just