10026 தமிழர் தகவல்: பொங்கல் சிறுகதைச் சிறப்பிதழ் 2014.

நா.சிவானந்தசோதி (ஆசிரியர்). கென்ட், பிரித்தானியா: நா.சிவானந்தசோதி, திருமுருகன் அறிவகம், 41, Haddington Road, Bromley,Kent BR1 5RG, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).

248 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00, அளவு: 26×19.5 சமீ.

தமிழர் தகவல் (இலண்டன்) இதழின் ஒரு இதழ் பொங்கல் சிறப்பிதழாகவும், ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலராகவும் வெளிவந்துள்ளது. இவ்வாறான பொங்கல் மலரொன்று 2005இலும் வெளியிடப்பட்டிருந்தது. வழமையான அம்சங்களுடன், இலங்கையிலும் புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் தேர்ந்த சிறுகதைகள்  பலவும் இம்மலரில் மறுபிரசுரமாகியுள்ளன. தெளிவத்தை ஜோசப் (உயிர்), சண்முகம் சிவலிங்கம் (திருப்பப்பட்ட தேவாலயமும் காணாமல்போன சில ஆண்டுகளும்), சாந்தன் (சொல்லமுடியாத பாடல்), குந்தவை (பயன்படல்), எம்.எல்.எம்.மன்சூர் (சலனங்கள்), தாமரைச்செல்வி (அடையாளம்), திசேரா (மறைந்துபோன உருக்கள்), தாட்சாயணி  (ஒன்பதாவது குரல்), த.மலர்ச்செல்வன் (கப்டன் குஞ்சானும் கூட்டாளிகளும்), தேவமுகுந்தன் (இருவர்), எம்.ரிஷான் ஷெரிப் (அம்மாவின் மோதிரம்), யோ.கர்ணன் (அரிசி), மயூரரூபன் (பெத்தாச்சி), பவானி ஆழ்வாப்பிள்ளை (லச்சுமி), மு.புஷ்பராஜன் (வாசல் அருகில் நின்றவன்), அ.இரவி (எழுந்த ஞாயிறு விழுந்ததன் பின்), சந்திரா இரவீந்திரன் (அபர்ணம் நனைந்த மழை), இணுவை ச.சிறீரங்கன் (நான் செத்த பிறகு), க.கலாமோகன் (20 ஈரோ), ஷோபாசக்தி (லைலா), பார்த்திபன் (கல்தோன்றி), பொ.கருணாகரமூர்த்தி (அக்கரையில் ஒரு கிராமம்), சாந்தினி வரதராஜன் (றைட்டோ?), சயந்தன் (கிழவனின் உயிர்), ஸ்ரீதரன் (இரண்டாயிரத்து ஒன்று), அ.முத்துலிங்கம் (தாழ்ப்பாள்களின் அவசியம்), என்.கே.மகாலிங்கம் (ஒரு பஸ் பயணம்), மணி வேலுப்பிள்ளை (பற்றுக்கோடு), தேவகாந்தன் (பாம்பு), செழியன் (வளைந்துபோன வீரவாள்), குமார் மூர்த்தி (உதவி), செல்வம் அருளானந்தம் (எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம்நாடி), சுமதி ரூபன் (இரவின் விடியல்), செ.டானியல் ஜீவா (கடல் யோசித்தது), பிரதீபா தில்லைநாதன் (ஒவ்வொரு நாளினதும் இறுதிவரி), மெலிஞ்சிமுத்தன் (பறவைகள் சுமக்கும் கதை), ரவிச்சந்திரிகா (பார்வை) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளின் சிறுகதைகளைப் பிரதானமாகவும், சுகாதாரம், சமயம், யோகாசனம், புத்தாண்டுப் பலன்கள் போன்ற பிற விடயங்களை இறுதியில் சில பக்கங்களில் உள்ளடக்கியதாகவும் இம்மலர் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17282 சிவசக்தி 2007.

ஜீ.முகுந்தராஜ், சுவ.பிரகாஷ், ஜே.சந்தோஷ் தமிழினியன் (இதழாசிரியர்கள்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு: அனோலியா அச்சகம்). 200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

20 Eur Prämie Ohne Einzahlung Casino

Content Book Of Darkness Slot Beliebte Spiele Nachfolgende Stationären Novoline Spielautomaten Sorgen für Mehr Abwechslung Wie gleichfalls Spielt Man Dies Runde? Intensiv sei parece bei