ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: திருவருள் அரங்கம், 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை).
43 பக்கம், விலை: இலவச வெளியீடு, அளவு: 18.5×13 சமீ.
திருவருள் அரங்க இலவச வெளியீடாக வெளிவந்துள்ள மலர். திருவருள் 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் ஆரம்பத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இந்துசமய இதழாகும். இதன் ஆசிரியர் குழுவில் வி.சதாசிவம், கு.குருசுவாமி, வி.சர்மா, பி.சாமி, து. சிவசுந்தரம், ம.இரத்னசபாபதி ஆகியோர் இருந்தார்கள். சைவ சமயத்தோடு தொடர்புடைய நாயன்மார்கள், கோயில்களின் வரலாறு, பாடல்கள், ஆன்மிக கருத்துகள், சைவம் சார்ந்த கட்டுரைகளை திருவருள் சஞ்சிகை கொண்டு வெளிவந்தது. சஞ்சிகையின் ஆரம்பகாலத்தில் சிவராத்திரி சிறப்பிதழாக வெளிவந்த மலர் இது. சிந்தனைச் சுழலிலே (ஆசிரியர்), வாழ்த்துரை வாணி (சுவாமி ஸ்ரீரங்கானந்தா), வாழ்த்துப் பாமாலை (அருட்கவி சீ.விநாசித்தம்பி), திருவருள் (நா.முத்தையா), மஹா சிவராத்திரி மகிமை (கி.பி.ஹரன்), இல்லை அபாயம் உனக்கே (கே.கே.கிருஷ்ணபிள்ளை), சிந்தனைக்கு (அ.க.சர்மா), சிவராத்திரியின் மாண்பு (சி.வேலாயுதம்), திருவருள் சேருமா? (செ.தனபாலசிங்கன்), திருமுறையின் பெருமை (பி.ஏ.எஸ்.ராஜசேகரன்), சிவராத்திரி (பொன் அ.கனகசபை), சிவக்கங்குல் (பாண்டியனார்), குருவாய் வருவாய் அருள்வாய் குகனே (ஸ்ரீ கார்த்திகேச சுவாமிகள்), தேர் வெண்பா (சீ.விநாசித்தம்பிப் புலவர்), விழிப்பு (காசி ஆனந்தன்), சிவராத்திரி (செ.சிறீக்கந்தராசா), நன்றியுரை (ஆசிரியர்) ஆகிய அம்சங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10731).