01.06.2015: உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு. தங்க.முகுந்தன். யாழ்ப்பாணம்: தங்க.முகுந்தன், 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ்).
24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
யாழ்ப்பாணப் பொது நூலக வரலாறு பற்றி வெளிவந்த பத்து நூல்களை ஆய்வுசெய்து அவற்றில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகத்தன்மை பற்றியும் நூலகம் எரிக்கப்பட்ட திகதி குறித்தும் இந்நூல் கேள்வி எழுப்புகின்றது. நுலகம் பற்றிய முன்னைய கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட சம்பவ திகதிகளிலும், சம்பவங்களின் விபரிப்பிலும் கட்டுரையாளர்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுவதும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.