எஸ்.சித்திராஞ்ஜன் (மலர் ஆசிரியர்). கொழும்பு 15: இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், 113/A, எலி ஹவுஸ் வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை).
iv, 71 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வருடாந்தம் நடத்துகின்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழாவின்போது வெளியிடப்பட்ட மலர். ஆர்.பாரதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, சண்முகம் சிவலிங்கம், தி.இராசகோபாலன், ஆகியோரின் கட்டுரைகளும், கவிஞர் அமிர்தநாயகம், எஸ்.சித்திராரஞ்ஜன் ஆகியோரின் கவிதைகளும், ஜோய் ஜெயக்குமார், எம்.பிரபாதரன், எஸ்.சுரேந்திரன் ஆகியோரின் சேகரிப்பான முக்கிய புகைப்பட ஆவணங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40758).