10046 தொடர்பாடல். கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்.

யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56/5 மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஜுலை 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).

xv, 104 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 350., அளவு: 18×12.5 சமீ.

தமிழ்மொழிமூலம் தொடர்பாடலைக் கற்கும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடநூலாக அமையும் வகையில் தொடர்பாடல் பற்றிய விரிவான விளக்கத்தை இந்நூல் வழங்குகின்றது. இந்நூலில் பத்துத் தலைப்புகளில் இப்புலமைத்துறை குறித்த சில அடிப்படையான விடயங்களை இலகுவான மொழிநடையில் வரைபட விளக்கங்களுடன் தர முயன்றிருக்கிறார். தொடர்பாடல் விளக்கம், தொடர்பாடல் வகைகள், உடல்சார் மொழி, தகவல் தொடர்புச் செயற்பாடு, தொடர்பாடல் தடைகள், தொடர்புத் தடைகளின் கட்டுப்பாடு, தொடர்பாடல் வலைப்பின்னல், தொடர்பியல் வளர்ச்சிப் போக்கு, தொடர்பாடற் சாதனங்கள், வினைத்திறன் மிக்க தகவல் தொடர்பின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17410 தமிழர் செவ்வியல் ஆடல்: சிறப்பு மலர். 

தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 114 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 29.5×21சமீ.