10067 அளவையியல்: வென்பட வரைமுறை-ஓர் அறிமுகம்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: மெய்யியற் கல்வி அகம், 46/2 கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளி,  1வது பதிப்பு, 1998. (கொழும்பு 12: Perfect Printers, 130, Duas Place, Gunasingapura)

14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் அளவையியலைக் கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் மெய்யியலைக் கற்கும் மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வென்படவரைமுறை (Venn Diagrams) பற்றிய தகவல்களுடன் உருவாக்கப்பட்ட நூல் இது. அக்கற்கை நெறியில் உள்ளடங்கும் தொடைக்கொள்கை என்ற அலகை, நூல்வடிவில் அறிமுகம் செய்துள்ளார். வாதத்தினூடாக முடிபை எவ்வாறு நிச்சயிப்பது, குறை வகுப்பை எவ்வாறு காட்டுவது என்பதே பலருக்கும் இடர்ப்பாடான விடயம். அதனை இந்நூலில் தெளிவுபடுத்த முயன்றுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129693).     

     

ஏனைய பதிவுகள்

17601 வீரனாக்குவது எது? மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு.

எஸ்.ஆர்.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம், 43/4, சனல் ஒழுங்கை, 1வது பதிப்பு, புரட்டாதி 2024. (வவுனியா: விஜய் பதிப்பகம்). xii, 85 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: