அ.ஸ்ரீபன் (மூலம்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்.ராதவல்லி வெளியீடு, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
108 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×13.5 சமீ.
திருமறை கிறிஸ்தவ வாழ்விற்கு முக்கியமான ஓர் ஏடாகக் காணப்படுகின்றது. திருமறையை விளக்க வேதாகம விளக்கவுரைகள் பயன்படுகின்றன. இந்நூலில் உள்ள கட்டுரைகளும் வேதாகமப் பகுதிகளுக்கான ஒரு விளக்கவுரையாக அமைகின்றது. திருச்சபை நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள திருவருகையின் காலம், இயேசுவின் பிறப்பு, இயேசுவின் வெளிப்பாடு, இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு, விண்ணேற்றத் திருநாள் தூய ஆவியரின் திருநாள், திரித்துவம், ஆத்மாக்களின் திருநாள் ஆகிய பகுதிகளுக்குப் பொருத்தமான முறையில் ஒவ்வொரு காலப் பகுதியிலும் ஆற்றப்படவேண்டிய அருளுரைகளை இந்நூல் தாங்கி நிற்கின்றது. அருளுரைகளில் அனுபவப் பகிர்வுகளும், கலாசாரத்தை வலியுறுத்தும் சிந்தனைப் போக்குகளும் ஆங்காங்கு பரவிக் காணப்படுகின்றன. போர்ச்சூழலுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கடவுளுடைய செயற்பாட்டை மக்கள், தமது வாழ்க்கையில் எவ்வாறு அனுபவிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் இறையியல் நூலாகவும் இதனைக் கருதலாம். அருள்பணி அ.ஸ்ரீபன் அடிகளார் பிலிமத்தலாவ இறையியல் கல்லூரியில் விரிவுரையாளராக 2010 முதல் பணியாற்றி வருகின்றார். இவர் நல்லூர் புனித யாக்கோபு ஆலயத்தின் பங்குத் தந்தையாக பணியாற்றிய 2004-2009 காலப்பகுதியில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233536).