10098 இலங்கைத் திருச்சபை: ஒரு வரலாறு 1945-1995.

பிரெட்றிக் மெடிஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: இலங்கைத் திருச்சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (தெகிவளை: ஸ்ரீதேவி பிரின்டர்ஸ், 27, பெப்பிலியான வீதி).

xiv, 372 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-9411-02-0.

1845இல் தாபிக்கப்பட்ட இலங்கைத் திருச்சபையின் 150ஆவது ஆண்டு நினைவாகத் தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணம். இலங்கைத் திருச்சபை 1945-1995 (அதி வண.கென்னத் பெர்னாண்டோ), இலங்கைத் திருச்சபையின் ஆரம்பம், ஆதீனத்துக்கான செபம், திருச்சபையின் திருப்பணி (அதி.வண.சுவிதின் பெர்னாண்டோ), இலங்கை ஆயரின் திருப்புனித நிலைப்படுத்தல் (மேர்வின் கனகரெட்ன), ஆதீனத்தின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் (அதி.வண.சுவிதின் பெர்னாண்டோ), தேசிய ஒருங்கிணைப்புக்குத் திருச்சபையின் பங்கு (வண.கலாநிதி ரியென்சி பெரேரா), வழிபாட்டு முறையைப் புதுப்பித்தல் (அதீத வண.சிட்னி நைட்), திருச்சபை வழிபாட்டை சுதேசமயப்படுத்தல் (வண.சீ.ஈ.ஜீ.வீரசூரிய), திருச்சபை வெளியீடுகள் (இஸ்ரேல் போல்ராஜ்), இலங்கைத் திருச்சபை இளைஞர் இயக்கம் (தானியா அமரசிங்க), இலங்கைத் திருச்சபை அன்னையர் மன்றம் (லக்ஷ்மி விக்கிரமதிலக்க), இலங்கைத் திருச்சபை மகளிர் பணிச்சபை (ஜெஸிக்கா அலஸ், சித்ரா கனகரட்ன), பரி.மார்கரெட் கன்னியர் மடம் (சித்ரா கனகரட்ன, சகோ.லூசி அக்னஸ்), குருநாகல் ஆதீனம் (வண. கனொன் உபாலி விக்ரமகே, வண.நிக்கொலஸ்,ரோஸே, வண.யொஹான் தேவானந்தா), மத சனசமூகங்கள்-தேவசேவிக்காராமய- குருநாகல் (மாலினி தேவானந்த), தேவசரணாராமய (மாலினி தேவானந்த), இலங்கைத் திருச்சபையும் தேசிய கிறிஸ்தவ மன்றமும் (ஷேர்லி ஜே.எஸ்.பீரிஸ்), பங்கின் சமூகச் சாட்சியம் (பத்மசிறி பாரதி), உலகளாவிய திருச்சபையுடனான எமது உறவுகள் (அதீத வண.சிட்னி நைட்), திருச்சபையின் சமூகப் பொறுப்புணர்வு (எக்ஸித் பெர்னாண்டோ), மூத்தோர் பராமரிப்பு (அதி வண. சுவிதின் பெர்னாண்டோ), குழந்தைகள் மத்தியில் பணிபுரிதல் (பிரியானி பெர்னாண்டோ), சூழல் (ஷேர்லி ஜே.எஸ்.பீரிஸ்), இலங்கையில் மதக் கல்வி (அதி வண. கென்னத் பெர்னாண்டோ), எமது பிள்ளைகள் மத்தியிலான கிறிஸ்தவக் கல்வி (மாலினி தேவானந்த), 1960க்கு முன்பான திருச்சபைப் பாடசாலைகள் (ஷேர்லி ஜே.எஸ்.பீரிஸ்), திருச்சபை பாடசாலைகள் (ஈ.எஸ்.தேவசகாயம்), ஆரம்பகால கோப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் கிறிஸ்தவ திருப்பணி (பிரெட்ரிக் மெடிஸ்), பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியில் திருச்சபையின் கல்விப்பணி (ஜோர்ஜ் ஏ.ஞானமுத்து), இலங்கையில் இங்கிலாந்து திருச்சபையின் கூட்டிணைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் (சீ.பரி.ஈ.குணசேகர, மலோரி விஜேசிங்க), நிதி (சீ.பரி.ஈ.குணசேகர), திருச்சபைச் சொத்துக்கள் (செட்ரிக் ஜே.ஓர்லொப்), பெண்களுக்கு குருப்பட்டமளித்தல் (சித்ரா கனகரெட்ன),  கொழும்பு ஆதீனத்தின் சேவையில் (தஞ்சா பீரிஸ்), குருநாகல் ஆதீனத்தின் சேவையில் (ஜீ.ஏ.லனரோல்), எமது திருச்சபையின் எதிர்காலம் (அதி வண.கென்னத் பெர்னாண்டோ), ஜிந்துப்பிட்டி பரி.தோமஸ் புராதன தேவாலயத்தின் அனைத்துமடங்கிய வரலாறு என்ற நூலிலிருந்து தெரிந்தெடுத்த சில பகுதிகள் (பிரெட்ரிக் மெடிஸ்), ஆயர் ஆச்சிபொல்ட் ரொல்லோ கிரஹம் காம்பல் (அதி வண.சுவிதின் பெர்னாண்டோ), கன்டபரிப் பேராயரின் இலங்கை விஜயம் (இலங்கைத் திருச்சபையாளன் -ஜனவரிஃபெப்ரவரி 1982), இங்கிலாந்து திருச்சபைக் குருப் பேரவையும் பொது மன்றமும்- 1956, திவ்விய சேவா ஆஷ்ரமய, கொழும்பு ஆதீனத்தைச் சேர்ந்த தேவாலயங்களின் நிரல், குருநாகல் ஆதினத்தைச் சேர்ந்த தேவாலயங்களின் நிரல் ஆகிய தலைப்புகளில் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56587).

ஏனைய பதிவுகள்

12720 – சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள்.

எஸ்.எல்.ரியாஸ். எம்.மொஹம்மட் ஜெஸ்மின். கல்முனை: ஹோலிபீல்ட் பப்ளிக்கேஷன், முதலாவது தளம், 220, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கல்முனை: அல்-நூர் கிராப்பிக்ஸ்). xi, 180 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200.,