10100 பங்குப் பயணத்தில் 110 ஆண்டுகள்.

எஸ்.செல்வி மேரி அன்ரோனியா. வவுனியா: பங்கு மேய்ப்புப் பணிச்சபை, புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (வவுனியா: ஜெய்ன் பிறின்ற், 5A,  U.C.Quarters, குருமண்பாடு).

44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

வவுனியா இரம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வரலாறு பற்றிய நூல். இந்நூல் வன்னி வாழ் மக்களின் வாழ்க்கையும் சூழலும், வன்னியின் முதல் இறைத்தூதன் யோசெவ்வாஸ் முனிவரும் விசுவாசத்தின் தந்தை பூதநாதரும் (கொட்டில் கோயிலும் கோயில் கிணறும், பக்தி வளர்ச்சிக்கான ஆரம்ப கலைப் புதுமைகள்), கோவிற் கட்டளைக்காரர். தற்போதைய ஆலயமும் அன்மீகமும் கண்ட வளர்ச்சியும், எமது பங்கு கத்தோலிக்கரும் விழாக்களும் (புனித அந்தோனியார் விழா, பாஸ்கு விழா, பனித அந்தோனியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழா, மன்னார் ஆயரின் பிரியாவிடை விழா, புதிய மன்னார் ஆயரின் வரவேற்பு விழா), புனித அந்தோனியாரும் பங்கு மக்களும், ஆண்டவன் பணியில், எமது ஆலயத்துடன் இணைந்துள்ள வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், எமது பங்கும் அதன் பக்திச் சபைகளும், எமது பங்கைச் சேர்ந்த ஏனைய துணைக் கோவில்கள், நினைவுக் குறிப்பின் பிரதி ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

10 Online Casino Bonus Ohne Einzahlung

Content Wie Kann Man Alle Online Casino Freispiele Ohne Einzahlung Klassifizieren? Wild Coins: 15 Freispiele Ohne Einzahlung Welche Arten Von Bonusangeboten Ohne Einzahlung Gibt Es?

11742 சொப்ஹொக்கில்சின் ஈடிப்பசு: முதலாவது பகுதி.

ஈழத்துப்பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd,

17657 கதை.

பார்த்திபன். சுவிட்சர்லாந்து: தமிழச்சு வெளியீடு, Zugerstr, 51, 6340 Baar 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (சென்னை 600 005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ், திருவல்லிக்கேணி). 334 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா