10105 புனித ஆசீர்வாதப்பர் அம்மானையும் நல்லூர்ப் பங்கு வரலாறும்.

யாழ். ஜெயம், அன்ரன் மத்தாயஸ். யாழ்ப்பாணம்: அருட்திரு அன்ரன் மத்தாயஸ், பங்குத் தந்தை, புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, மே 2000. (யாழ்ப்பாணம்: புனித வளனார் அச்சகம்).

xii, 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 955- 95495-3-7.

கவிஞர் யாழ். ஜெயம் என்று அழைக்கப்படும் விக்டர் மாஸ்டர், 1910இல் புலவர் சுவக்கீன்பிள்ளை எழுதிய அம்மானையை அடிப்படையாகக்கொண்டு யாத்து, புனித ஆசீர்வாதப்பர் பெயரிற் பாடிய அம்மானையும், யாழ். பல்கலைக்கழகக் கிறிஸ்தவ நாகரிகத் துறைத்தலைவர் அருட்திரு அன்ரன் மத்தாயஸ் எழுதிய நல்லூர்ப் புனித ஆசீர்வாதப்பர் பங்கின் சுருக்கமான வரலாறும் இணைந்து நூலுருப்பெற்றுள்ளன. இவ்வம்மானை, இத்தாலி, பிறப்பும் பாலப்பருவமும், முதற் புதுமை, சுபியாக்கோ கெபியில், சாத்தானின் சூழ்ச்சி, உயிர்த்த திருநாளிற் புதுமையாய் உணவு உண்ட காதை, உடலாசை வென்றமை, நச்சுப் பாத்திரம் உடைந்தமை, பேய்பிடித்தவர் குணமடைந்தமை, மலைப்பாறையிலே நீருற்று, கத்தி- பிடியிற் பொருந்தியமை, மோரீசர் நீர்மேல் நடந்தமை, நஞ்சுள்ள அப்பத்தைக் காகம் எறிந்தமை, ஒழுக்கம் கெட்டவர் மூலம் புரிந்த இழுக்கம் நீங்கியமை, கசீனோ மலை அடைந்தமை, மன்றாட்டால் பாறை உடைந்தமை, சுவர் விழுந்து நசிந்த இளைஞன் சுகம் அடைந்தமை, தீர்க்கதரிசன வல்லபம், இரண்டாம் தீர்க்கதரிசனம், மூன்றாம் தீர்க்கதரிசனம், நான்காம் தீர்க்கதரிசனம், மடங்கட்டக் கனவில் வரைபடம், குழியிலிருந்த பிரேதம் வெளியேறியமை, கடனிலிருந்து வெளியேறியமை, கண்ணின் திருநோக்காற் கைவிலங்கு உடைந்தமை, இறந்த குழந்தை உயிர் பெற்றமை, தங்கை ஸ்கொலாஸ்ரிக்கா மூலம் மழை பெய்விக்கப்பட்டமை, தங்கையின் திருமரணக் காட்சி கண்டமை, ஜேர்மான் ஆயர் அவர்களின் ஆன்மாவைத் தரிசித்தமை, புனிதரது திருமரணம் ஆகிய 30 தலைப்புகளில் இவ்வம்மானை புனிதரது வாழ்வை இலக்கிய நயத்துடன் எடுத்துச் சொல்கின்றது. நூலின் இறுதியில் புனித ஆசீர்வாதப்பர் சுரூபம் (வரவணிக்கம்), புனித ஆசீர்வாதப்பர் மன்றாட்ட மாலை ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 129674).  

ஏனைய பதிவுகள்