10108 போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்.

செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஓப்செட்).

xvi, 288 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21×14 சமீ.

போதி தர்மர், தென் இந்தியாவில்- தமிழ் மண்ணில் தோன்றிய ஞானி. பௌத்தம் வலுவிழந்துசென்ற வேளையில் சீனதேசத்தை அவர் அடைந்து அங்கு ஜென் (Zen) தத்தவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனிதநேயப் பணிகளால் சீனர்களின் மனதைக் கவர்ந்தவர். இந்நூலில் ஆசிரியர் குருபாதம் அவர்கள், ஒரு கண்ணோட்டம், விதிமுறைகள் இல்லாது வாழ்வதே இந்த ஞானிகளின் விதிமுறைகள், எல்லாமானவராகவும் எல்லாமற்றவராகவும் இரு ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் 32 அத்தியாயத் தலைப்புகளில் ஏராளமான தகவல்களைத் தந்துள்ளார். போதிதர்மர் பற்றி ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ள செய்தி தொடங்கி எராளமான வரலாற்றுத் தகவல்களை நம்முன் வைத்திருக்கிறார். மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்த செல்லத்துரை குருபாதத்தின் தந்தையார் அங்கு புகையிரத இலாகாவில் பணியாற்றியவர். உலக யுத்த அசம்பாவிதங்களின் பின்னர் இள வயதில் யாழ்ப்பாணம் திரும்பியவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய குருபாதம், யாழ்ப்பாணம்- ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் சவூதி அரேபியாவில் Yanbu நகரில் நூலகமொன்றிலும் பணியாற்றியுள்ளார். அக்காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் உத்தியோகபூர்வ செய்தி இதழின் நிர்வாக ஆசிரியராகவும் செயற்பட்டிருந்தார். பின்னாளில் கனடாவில் குடியேறி அங்குள்ள சட்ட நிறவனமொன்றில் paralegal ஆகவும் சத்தியப் பிரமாண ஆணையாளராகவும் கடமையாற்றித் தற்போது எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55976).

ஏனைய பதிவுகள்

Faux Billets En Euros

Content Mr Bet Book Of Maya Vortragen Kasino Erreichbar Spassino Casino Prämie Codes Best Casino Unsereiner abschmecken sekundär, inwiefern der Kundendienst ihr besten Spielhölle jeden