10113 இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும் வழிபாட்டு முறையும்.

அரங்க முருகையன். கும்பகோணம் 612401: குலோத்துங்கன் வெளியீட்டகம், அன்பகம், 4, சிவபுரம் சாலை, சாக்கோட்டை, தஞ்சை மாவட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2002. (கும்பகோணம் 612401: பாலாஜி பிறின்டர்ஸ், 196 சீனிவாச நகர், சாக்கோட்டை).

(4), 24 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 18×12சமீ.

‘சைவ உலகம்’ காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் நூல்வடிவம். கோயில்கள் பழங்காலத்திலே எவ்வாறு இயங்கிவந்திருந்தன என்பதை சான்றோரின் நூல்கள், பாடல்களின் ஆதாரங்களுடன் இச்சிறு நூலில் விளக்கியுள்ளார். மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், வழிபடும் இடமாகவும், உணவு புரந்து உதவும் அறச்சாலையாகவும் மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக்கூடமாகவும், இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளை வளர்க்க உதவும் கலைக்கூடமாகவும், உடற்பிணி மற்றும் மனநோய் தீர்க்கும் மருத்துவசாலையாகவும், சான்றோர்கள் வதிந்து ஓகம் (யோகம்) முதலியன பயிற்றுவித்து ஒழுக்கநெறியை வளர்த்து மாந்தரிடையே எழும் பூசல்களை ஒழித்து மக்களிடையே அமைதியும் நல்லெண்ணமும் நிலவ வழிசெய்வதாய் பண்டைய கோவில்கள் இருந்துவந்துள்ளன என்பதை பக்தி இலக்கியங்களின் வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துரைத்து எதிர்காலத்தில் கோவில்களின்  பன்முக சமூகப்பணிகள் அவ்வாறாகவே அமையவேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டு நூலை நிறைவுசெய்திருக்கிறார். கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  அமரர் தமிழ்மணி அரங்க முருகையன் (01.10.1932-13.9.2009) இலங்கை, மலாயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் வாழ்ந்தவர். பிரித்தானிய வான்படையில் எழுத்தராகப் பணியாற்றி 20 ஆண்டுகளின் பின்னர் தலைமை எழுத்தர் நிலையில் இளைப்பாறியவர். 1972இல் தமிழகம் திரும்பிய இவர் அங்கு சிலகாலம் வர்த்தகராகவிருந்து, பின்னர் பிரித்தானியாவுக்கு வந்து அங்கு விமானநிலைய பண்டகசாலைப் பொறுப்பானராகப் பணியாற்றியவர். லண்டனில் ஈழத்தமிழருடன் நெரங்கிய உறவுகொண்டிருந்த இவர், லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைளின் சிறப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருவள்ளவர் தமிழ்ப்பள்ளி, மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் லண்டனில் 2009இல் மறைந்தார்.

ஏனைய பதிவுகள்

10130 புதிய இந்து சமய பாடத் திரட்டு: 1975-1977.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1975. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை). viii, 345 பக்கம், விலை: ரூபா

Gets Bet Casino

Content Testați Princess Casino Ce Un Bonus Fara Depunere – Casino Burning Hot Rotiri Gratuite Casino De Achitare Întrebări Frecvente Asupra Bonusul Betano Ci Vărsare