10123 வளரும் சிறுவர்க்கு வாழும் இந்து சமயம் – பாகம் 1.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2007, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 29.5×21 சமீ.

இந்து சமயம் பற்றிய அடிப்படை விளக்கங்கள், ஆலய அமைப்பு முறைகள், வழிபாட்டு முறைகள், கிரியைகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதோடு அவற்றுக்கான அறிவியல் விஞ்ஞான விளக்கங்களையும் இந்நூல் தருகின்றது. இதிகாச, புராணக் கதைகள், சின்னஞ்சிறு பாடல்கள், திருமுறைகள் என்பனவும் படங்களும் கொண்டதாக இலகு தமிழில் அழகிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும் புலம்பெயர்நாடுகளில் வாழும் இளம் சிறுவர்களுக்கும் பயனுள்ள நூல். நாமும் நமது சூழலும், ஆலய வழிபாடு, நாம் வணங்கும் தெய்வங்கள், இந்து சமயப் பழக்க வழக்கங்கள், நமது குணங்களும் செயற்பாடுகளும், நமது சமயநூல்கள், வீடுகளில் நிகழும் விழாக்களும் பண்டிகைகளும், சமயப் பெரியார்கள் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் முதற் பதிப்பு, நோர்வே இந்து கலாச்சார மன்றத்தினால் (நோர்வே – ஒஸ்லோ சிவசுப்பிரமணியர் ஆலயம்) வெளியிடப்பட்டிருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 196559).     

ஏனைய பதிவுகள்

16483 உதிரிப் பூக்கள் : கவிதைத் தொகுப்பு.

இந்திராணி புஷ்பராஜா. மட்டக்களப்பு: இந்திராணி புஷ்பராஜா, இல. 6, திருமகள் வீதி கிழக்கு, கல்லடி, உப்போடை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, (5), 65 பக்கம், விலை: ரூபா 250.,

12991 – அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு: நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள்.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், எண் 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 151