10131 இந்து சமய ஆலயங்களின் பரிபாலனத்திற்கான வழிகாட்டிக் கைநூல்.

ஆலயப் பிரிவு (தொகுப்பாளர்கள்). கொழும்பு 4: ஆலயப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

72 பக்கம், அட்டவணைகள், விலை: இலவசம், அளவு: 21.5×14.5 சமீ.

இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களை உரியமுறையில் பரிபாலனம் செய்துகொள்வதற்கான வழிகாட்டல் அடங்கிய கைநூல் இதுவாகும். ஒரு ஆலயத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகள், தகைமைகள் என ஆரம்பிக்கும் பகுதியில் ஆலய நிர்வாகம், பூசகரின் கடமைகள், விதிகள், கோவிலின் விதி, கோவிலின் சொத்துக்கள் எனஅனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சமயநிறுவனங்கள் தொடர்பில் கையாளப்படும் சில முக்கிய விதிமுறைகள் ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் சமூகப் பணிகளில் ஆலய நிர்வாகம் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளும், பொறுப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்களின் நிதி ஒழுங்குவிதி என்ற தலைப்பின்கீழ் எட்டு அத்தியாயங்களாக சில முக்கிய விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மாதிரிக்கு சிலஆலய நிதி ஏடுகளின் பிரதிகளைத் தந்துள்ளனர். வங்கிக் கணக்கு, பேரேடு, காசாளர் ஏடு, பெறுவனவுகள் தொடர்பானவை. மாதாந்த பெறுவனவு அறிக்கை என்பவை.  இந்து சமய கலாசார அலுல்கள் திணைக்களத்தில் ஒரு ஆலயத்தைப் பதிவுசெய்வதற்காக வேண்டப்படும் விபரங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளமையும், ஆலயங்கள் பின்பற்றும் யாப்புகள் தொடர்பான மாதிரி யாப்பும் தரப்பட்டுள்ளன. இறுதியாக கோவில்கள் என்ற பகுதியில் இறைவன், வழிபாடுகள், தெய்வங்கள், விக்கிரகங்கள் என்பவை பற்றிப் பொதுவான பல தகவல்கள் ஒரு சிறு தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Jogos infantilidade caça algum

Content Gates of Olympus – RTP 96,50% | Casino online Brazilian Roulette Free spins para slots Como apostar slots grátis? Barulho que amadurecido as Rodadas