யாழ். வண்ணை பாரத்துவாசி ஆ.சண்முகரத்தின ஐயர் (மூலப் பதிப்பாசிரியர்), கா.செ.நடராசா (சொற்பிரிப்பு). கொழும்பு 7: இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு 06: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், 501/2, காலி வீதி).
xiii, 365 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வாழ்ந்து மறைந்த பாரத்துவாசி உயர்திரு ஆ.சண்முகஇரத்தின ஐயரால் 1909ம் ஆண்டு யாழ்ப்பாணம் திருஞானசம்பந்தர் அச்சுக்கூடத்தின் வழியாகப் பதிப்பிக்கப்பட்ட புராதனநூல் திரிகோணாசல புராணமாகும். இந்நூலின் மூலநூலாசிரியரான புலவர் யார், இந்நூல் எழுதப்பட்ட காலம் யாது என்பன அறியப்படவில்லை. கி.பி.17ம் ஆண்டளவில் வாழ்ந்திருக்கலாம் என்று பண்டிதர் கா.செ.நடராசா அவர்கள் கருதுகின்றார். கோணேசர் கல்வெட்டில் இடம்பெற்ற விடயங்களை விரிவுபடுத்திச் செய்யுள்நடையில் அமைத்துக்கூறும் இலக்கியமே திரிகோணாசல புராணம். திருக்கோணேஸ்வரம் தொடர்பான மரபுவழிக் கதைகளின் மிக வளர்ச்சி பொருந்திய நிலையினைக் காட்டும் 1491 செய்யுள்களக்கொண்ட இந்நூலில் கோயிலின் மூலக் கதைகளும் மரபுகளும் திருக்கோணமலையின் தேசத்து வரலாறாக விரிவாக்கம் பெற்றுள்ளன. பண்டிதர் கா.செ.நடராசா அவர்களின் உதவியுடன் இம் மூலநூலின் செய்யுள்களைச் சொற்பிரித்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நூலை 1997இல் மீள்பதிப்புச் செய்துள்ளது. திருக்கோணமலையையும் அது சார்ந்த பல வரலாற்றுத் தகவல்களையும் இந்நூல்வழியாக ஆய்வாளர்கள் அறிந்துகொள்ளலாம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24601).