த.சுப்பிரமணியம். வட்டுக்கோட்டை: சைவ இளைஞர் சங்கம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு 3: நடராஜா அச்சகம்).
24 பக்கம், விலை: 30சதம், அளவு: 17.5×12 சமீ.
இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான திருக்கேதீச்சரம் பற்றிய பாடல்களின் தொகுப்புநூல். தோத்திரப்பாக்கள், தேவாரத் திருப்பதிகங்கள் என்பவற்றின் தொகுப்பாக வெளிவரும் இச்சிறுநுலின் நூலாசிரியர் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2089).