10143 திருக்கோணேஸ்வரம்.

கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம், நாகமணி திவாகரன் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணேஸ்வரம்: கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ புளுமென்டால் வீதி).

(8), 1003 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 1250., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-4926-00-4.

இப்பாரிய தொகுப்பு நூலில் ஏடுகள், சாசனங்கள் மற்றும் அவ்வக்காலங்களில் உபயோகத்திலிருந்த அச்சு ஊடகங்களினூடாக வெளியிடப்பட்ட திருக்கோணேஸ்வரம் தொடர்பான புராணங்கள், பிரபந்தங்கள், செய்யுள்கள், இலக்கியங்கள், வரலாறுகள், ஆய்வுகள், தோத்திரங்கள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள், கவிதைகள் மற்றும் திருக்கோணேஸ்வரம் தொடர்பான அரிய வரலாற்றுப் புகைப்படங்கள் போன்றவை அடங்குகின்றன. திருக்கோணேஸ்வர பதிகமும் திருப்புகழும் தோத்திரங்களும் என்ற முதற் பகுதியில் தேவாரத் திருப்புகழ் திரட்டு, திருக்கோணேஸ்வரி மாதுமை அம்பாள் தேரடிச் சிந்துகள் (வி.சிகண்டிதாசன்), திருக்கோணேஸ்வரர் திருவூஞ்சற் பதிகம், (பண்டிதர் இ.வடிவேலு), பக்திப் பாமாலை (மணிமேகலாதேவி கார்த்திகேசு), திருமுறைகளில் திருக்கோணேஸ்வரம் (க.கணபதிப்பிள்ளை) ஆகிய படைப்புகள் உள்ளன. புராண வரலாறுகள் என்ற பிரிவில் புலோலி பொன்னையா வைத்தியலிங்க தேசிகர் 1916இல் பதிப்பித்த ஸ்ரீ தக்ஷிண கைலாச புராணம், இந்து கலாசார அலுவல் திணைக்களம் பதிப்பித்த திருக்கரைசைப் புராணம், திரிகோணாசல புராணம் என்பவற்றின் முக்கிய பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பாடல் என்ற மூன்றாம் பிரிவில் கவி இராஜவரோதயரால் இயற்றப்பட்ட கோணேசர் கல்வெட்டு, திருக்கோணமலை சுப்பிரமணியர் ஆறுமுகம் 1806இல் இயற்றிய கோணமலை அந்தாதி, பண்டிதர் அ.ஆறுமுகம் இயற்றிய கோணேசர் ஆற்றுப்படை என்பன அடங்குகின்றன. வரலாறு என்ற பிரிவில் திருக்கோணாசல வைபவம் (வே.அகிலேசபிள்ளை), யாழ்ப்பாண வைபவ மாலை ஒரு மீள்வாசிப்பு (மாதகல் மயில்வாகனப் புலவர்), கோணேசர் கோயில் வரலாறு (இ.வடிவேல்), திருக்கோணேஸ்வரம் தென்மையும் வன்மையும் (இ.வடிவேல்), திருக்கோணேஸ்வர திருத்தல யாத்திரை (வே.வரதசுந்தரம்), Pilgrimage to Koneswaram (V.Varathasundaram) ஆகிய நூல்களின் முக்கிய தரவுகள் இடம்பெற்றுள்ளன. வரலாற்று ஆய்வு நூல்கள் என்ற 5ஆவது பிரிவில்  Trincomalie Bronzes (W.பாலேந்திரா), முழநௌறயசயஅ (சி.எஸ்.நவரத்தினம்),  கோணேஸ்வரம் (செ.குணசிங்கம்), குளக்கோட்டன் தரிசனம் (க.தங்கேஸ்வரி), கிழக்கிலங்கைப் பூர்வீக வரலாறு (க.தங்கேஸ்வரி), இலங்கையில் இந்து சமயம் (சி.பத்மநாதன்), காலனித்துவ திருக்கோணமலை (க.சரவணபவன்) ஆகிய முக்கிய நூல்களின் திருக்கோணேஸ்வரம் தொடர்பான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. புனருத்தாரணம் என்ற ஆறாவது பிரிவில் 1963, 1981, 1993, 1998 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பெற்ற மேற்படி ஆலயத்தின் கும்பாபிஷேக மலர்கள் மீள்பிரசுரம் பெற்றுள்ளன. 7ம் பிரிவில் கோணேசர் கோவில் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. 8வது பிரிவில் கோவில் தொடர்பான நிர்வாக அறிக்கைகளும் 9வது பிரிவில் கோவில் வரலாறு கூறும் முக்கிய நிழற்படங்களும், இறுதிப்பிரிவான 10ஆவது பிரிவில் கடவுளும் நானும் என்ற தலைப்பில் ஆரையம்பதி மு.கணபதிப்பிள்ளை எழுதிய கவிதையும், விக்கிபீடியாவில் காணப்பட்ட திருக்கோணமலை பற்றிய குறிப்பும், மகா சக்திபீடம்-சங்கரிதேவி ஆலயம் (திருக்கோணேஸ்வரம்) பற்றிய தகவலும், ஒரே பார்வையில் திருக்கோணேஸ்வரத்தின் வரலாறு என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளன. இதுவரை காலமும் வெளிவந்த நூல்களுள் திருக்கோணமலை-திருக்கோணேஸ்வரம் பற்றிய விரிந்த பார்வையை இந்நூலே வழங்கியிருக்கின்றது.

ஏனைய பதிவுகள்

12348 – இளங்கதிர்: 10ஆவது ஆண்டு மலர் (1957-1958).

12348 இளங்கதிர்: 10ஆவது ஆண்டு மலர் (1957-1958). ஆ.வேலுப்பிள்ளை (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1958. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, சில்வர் ஸ்மித் வீதி).