10146 புட்டபர்த்தியில் நான்.

தேவன்-யாழ்ப்பாணம் (இயற்பெயர்: இ.மகாதேவன்). யாழ்ப்பாணம்: இ.மகாதேவன், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறைச் சாலை).

64 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், நாடக இயக்குநரும், பேச்சாளருமாகிய தேவன்-யாழ்ப்பாணம் (27.9.1924-25.12.1982) அவர்கள் தனக்கு 1972இல் டன்கிறியாடைடின் என்றொரு நோய் வந்ததையும், வைத்தியர்கள் கைவிட்டதையும் அதைத் தெடர்ந்து புட்டபர்த்திக்குச் சென்று திரும்பியதையும் ‘புட்டபர்த்தியில் நான்’ என்றொரு ஈழநாடு கட்டுரைத் தொடர் வழியாக பிரசுரித்திருந்தார். அக்கட்டுரையின் புதுக்கிய நூலுரு இதுவாகும். 1981-1982 காலப்பகுதியில் தாங்கொணாத வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இவர் தமிழகம் சென்று நோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டதுடன் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தரிசனத்தையும் பெற்று நாடு திரும்பினார். உலகியல் வாழ்வில் தம் சக்திகள் அனைத்தையும் பிரயோகித்தும் வெற்றி காணாதவன் ஈற்றில் இறைவனிடம் சரணடைவது தவிர்க்கவியலாதது என்பதே நூலின் சாரமாகவுள்ளது. ஆசிரியர் பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் தெய்வீக அருளை இந்நூலில் அனுபவபூர்வமாக விபரித்திருக்கிறார். ‘சதையம் ஒரு நொய்தான உறுப்பு.  அதில் (கல்சியப்படிவம்) ஒரு கல் தோன்றியிருந்தது. சதையத்திலிருந்து புறப்படும் சமிபாட்டு நொதியங்களை உரிய இடத்திற்குப் போகவிடாமல் இந்த கல்சியப்படிவம் தடுத்துவந்துள்ளது. அண்மையில் வேறொரு நோய்க்கான எக்ஸ்ரே பரிசோதனையின்போது கல் இருக்கும் பகுதியை அண்டிய பகுதியும் பரிசோதிக்கப்பட்டது. சதையத்தில் நொறுங்கிய கற்கள் காணப்படுகின்றனவென்று வைத்தியர் சொன்னார். அப்படியானால் அதை (சதையத்தில் காணப்பட்ட கல்லை) நொறுக்கியவர் யார்? என்னையே கேட்டுக்கொள்கிறேன். 1972இல் கிழக்கு-மேற்கு வைத்தியத்துறைகளால் கைவிடப்பட்ட நான் இன்று (27.2.1982இல் எழுதப்பட்டது) உயிரோடு நடமாடுவது எப்படி? எதனால் எனது நோய் மாறியதென்பதற்கு எந்தப் பகுத்தறிவுவாதியால் பதில்கூறமுடியும்?’ என்று இந்நூலின் முகவுரையில் ஆசிரியர் கேள்வி எழுப்பகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 106078).  

ஏனைய பதிவுகள்

16237 எண்ணம் போல் வாழ்க்கை : மனிதத்துடன் சமூகத்துக்கான ஒரு பயணம்.

நிவேதா சிவராஜா. யாழ்ப்பாணம்: மனிதம் வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). xv, 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,