10153 இளைய தலைமுறையினருக்கு பன்னிரு திருமுறைகள் திரட்டு.

சி.வ.இரத்தினசிங்கம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 05: எம்.கே. எண்டர்பிரைஸஸ்).

xxxii, 560 பக்கம், விலை: இந்திய ரூபா 220., அளவு: 22.5×15 சமீ.

இந்நூலில் பன்னிரு திருமுறைகள் அடங்கலாக திருப்புகழ், அம்பிகைப் பாடல்களுடன் அபிராமி அந்தாதி, திருப்பாவை உள்ளிட்ட நாலாயிர திவ்விய பிரபந்தத் தோத்திரங்கள், ஆஞ்சநேயர், ஐயப்ப சுவாமிகள் ஆகியோர் மீதான பக்திப் பாடல்கள் எனப் பலதரப்பட்ட பாடல்களைத் தெரிவுசெய்து ஒரே நூலாக வடிவமைத்துள்ளார். காலம்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் கலாசார விழுமிய நெறிகளும் சைவப் பண்புகளும் மெல்ல மறக்கப்பட்டுவரும் பல்லினச் சூழலில், இந்நூல் இளையதலைமுறையினரை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36866).

ஏனைய பதிவுகள்