10166 திருமலை அன்னை மீது: முறையீட்டுப் பாடல்கள்.

வி.சிகண்டிதாசன். திருக்கோணமலை: ஓம் சக்தி சோதிட ஆராய்ச்சி நிலையம், 168/1, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2003. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், நீதிமன்ற வீதி).

xii, 76 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ.

திருக்கோணமலையில் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் பேரில் பாடப்பெற்றுள்ள 57 பக்திப் பாடல்கள் இவை. ஆலய வரலாற்றுக் காவியம் உள்ளிட்ட தலச்சிறப்பு, அன்னையை வேண்டுவோருக்கு, அடியவரைக் காக்கும் அன்னையே என்பன போன்ற தலைப்புகளில் இவை பாடப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10024 கோபுரம்: திறப்புவிழா சிறப்புமலர்.

சி.பாஸ்க்கரா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5