எம்.மதனி இஸ்மாயில் (ஆங்கில மூலம்), யூ.எல்.தாவூத் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 12: ஸபீனா பதிப்பகம், 20, பிரைஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1964. (கொழும்பு 12: ஸபினா அச்சகம்).
(5), 47 பக்கம். விலை: ரூபா 1., அளவு: 17×11.5 சமீ.
கி.பி. 571ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி மக்காவில் அவதரித்தவர் முகம்மது நபி. தான் பிறப்பதற்கு முன்னரே தந்தையை இழந்தவர். தனது ஆறாவது வயதில் தாயையும் இழந்தவர். பெரியதந்தையாரான அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும், அவரது மறைவின் பின்னர் சிறிய தந்தையாரான அபுதாலிப் அவர்களாலும் பாதுகாத்து வளர்க்கப்பட்டவர். முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எளிய முறையில் விளக்குகின்றது. ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூ.எல்.தாவூத், கவிதை, இலக்கியம், இஸ்லாம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். இஸ்லாம்-இஸ்லாமிய இலக்கியம் பற்றிய இவரது கட்டுரைகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87295).