10199 கதை சொல்லும் உடப்பு: உடப்பின் பண்பாட்டுக் கூறுகள்.

உடப்பூர் வீரசொக்கன். உடப்பூர்: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை).

xii, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-19070-2-0.

உடப்பூருக்கே சிறப்பாக உரிய நாட்டார் மரபுகளையும் மானிடவியற் கோலங்களையும் கொண்டுள்ள இந்நூலில் உடப்பூர் கிராமத்தின் அமைப்பு, தொழிற்பாட்டு நிலைகள், விருந்தோம்பல் பண்பு, முதலியவை சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன.  உடப்பூர் கிராமத்து சூழல், பண்பாட்டுத் தனித்துவம்,  உடப்பூரின் பூர்வீக மகிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது போன்ற தகவல்கள் இந்நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இக்கிராமத்தின் காட்சிகளையும் உள்ளடக்கங்களையும் இந்நூலிலுள்ள தேர்ந்த கட்டுரைகள் விரிவாக எடுத்துரைக்கின்றன. உடப்பூர் என்னும் கிராமம், உடப்பு மக்களின் ஜீவனோபாயத் தொழில், உடப்பில் வணங்கிவரும் சிறுதெய்வ வழிபாடுகள், எங்களுர் சித்திரைச் செவ்வாய், உடப்பு பிரதேசத்தின் கடற்பரப்பில் வழக்கில் உள்ள அருந்தமிழ்ச் சொற்கள் சில, சீராரும் உடப்பினிலே சீர்வளம் கொண்ட தொட்டக்களியாறு, உடப்பு மக்களிடத்தில் காதலோடு தொடர்பான அம்பாப் பாடல், உடப்பில் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையும் சித்திரை புதுவருடப் பிறப்பும், உடப்பில் நாடக வளர்ச்சியும் சில அவதானிப்புகளும், உடப்பு பிரதேசத்தில் அரும்பிநிற்கும் இலக்கிய வடிவங்கள், உடப்பூர் நாட்டார் பாடல்களின் மகிமைச் சிறப்புகள், புத்தளம் பிராந்திய உடப்பின் மேடைக் கூத்துக்களின் பின்புலம், தமிழரின் தனித்துவத்தைப் பேணும் உடப்பின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள், உடப்பு பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் நிகழ்கலைகள் ஒரு கண்ணோட்டம், உடப்பு பிரதேசத்தில் முனைப்புப் பெற்றுவரும் கலை, இலக்கியப் போக்கும் அதன் பின்புலங்களும், உடப்பு மண்ணின் மாணிக்கங்கள், உடப்பின் தீபாவளி, உடப்பில் பழக்கத்தில் இருக்கும் விருந்தோம்பல் பண்பாடு, செங்கதிர் அதிதி (2011 டிசம்பர் மாதம் 48ஆவது இதழில் பிரசுரமான கட்டுரை) ஆகிய 19 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56234).

ஏனைய பதிவுகள்