குமுதினி சாமுவல் (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், Social Scientists Association, 12, Sulaiman Terrace 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, டாக்டர் ஈ ஏ குரே மாவத்தை).
116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
பின்புலம், பெண்கள் செயற்பாட்டுக் குழுவினர், சமாதானத்திற்கான பெண்கள் (WFP), இலங்கையில் தாய்மாரும் மகள்மாரும் (MDL), அன்னையர் முன்னணி (தென் பகுதி), அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான செயற்பாடு, சமாதானத்திற்கான தேசியகூட்டிணைவு, வட கிழக்கில் பெண்களின் செயற்பாட்டு நிலை, அன்னையர் முன்னணி (வட பகுதி), பூரணி பெண்கள் நிலையம், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 1990களில் பெண்கள் கூட்டிணைவின் புதிய உருவாக்கம் (போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம், பொலநறுவ மாவட்டப் பெண்கள் குழு, சமாதானத்திற்கான பெண்கள் கூட்டணி, இலங்கைப் பெண்கள் என்.ஜீ.ஓ. பேரவை, விழிப்புக் கூட்டணி), மோதல் காலத்தில் பாலியல் வன்முறையும் பெண்களின் பதிற்குறியும், 2001-போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னைய ஆண்டு, பெண்களையும் பால்நிலை தொடர்பு விடயங்களையும் சமாதானச் செயல்முறையில் உள்ளடக்குமாறு பெண்களின் எடுத்துரைப்பு, முடிவுரை ஆகிய அத்தியாயங்களின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2246).