10205 வடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும் (போரின் பின்னரான நிலை).

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல. 7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டேர்ஸ், இல.717, காங்கேசன்துறை வீதி).

v, 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 977-180-03100-0-2.

இந்நூல் பெண்களது காணி உரிமைகள் தொடர்பாக குறிப்பிட்ட மூன்று பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பெண்களுக்கு காணி தொடர்பான சட்ட விளக்கங்களோடு, அறிவூட்டும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆய்வின் பின்னணி, நோக்கம், ஆய்வு முறையியல், ஆய்வின் கருதுகோள், கோட்பாட்டுரீதியான அணுகுமுறை, ஆய்வுப் பிரதேசம், காணிஉரிமையும் பெண்களும், ஆய்வுப் பிரதேச கள நிலைமைகள், காணியற்றோர், சட்டரீதியற்ற காணி உடைமை, பெண்களின் காணி தொடர்பான பிரச்சினைகளில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுகள், ஆய்வு முடிவுகளும் சிபார்சுகளும் ஆகிய பல்வேறு விடயங்கள் இந்நூலிலுள்ள பிரதான அத்தியாயங்கள் ஐந்திலும் ஆராயப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234272).     

ஏனைய பதிவுகள்