யோகரட்ணம். பிரான்ஸ்: ராமன் யோகரட்ணம், இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, 70, Squzre des bauves, 95140 garges les gonesse, 1வது பதிப்பு, மே 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
184 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21×14 சமீ.
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களின், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் சாதியக் கொடுமை பற்றிய விரிவான பதிவு. திரு.கந்தையா மாஸ்டர், திரு.சுந்தரமூர்த்தி, சமாதான நீதிவான், மணிமாமா, பாடசாலையில் உலாவிய சாதியம், சாதிய எதிர்ப்பு இயக்கங்கள், நிச்சாமம் மகேஸ்வரி, ஆயுN, இரண்டு எழுத்தின் மகத்துவம், தோழர் எஸ்.ரி.என். நாகரத்தினம், சாதுரியம், அனைத்து இலங்கைத் தமிழ் பௌத்த காங்கிரஸ், திரு. வைரமுத்து, மாணவர் சங்கத் தலைவர், கலகக்காரர்கள், தோழர் சண்முகதாசனின் சங்கானை விஜயம், சலூன் விவகாரம், தலித் சமூகத்தின் வன்முறை எதிர்ப்பு, உதாரணத்திற்கு ஒரு சம்பவம், ஆலய நுழைவு, ஐயரின் புரட்சி, தலித்துகளும் இடதுசாரிகளும், தலித் சமூகத்தின் இனிய நண்பன் விநோதன், வி.பொன்னம்பலம், தலித் சமூகத்தின் ஒற்றுமையும் தமிழ் மேட்டுக்குடி அரசியல் தலைமைகளின் சூழ்ச்சிகளும், நான் எப்படி சேகுவரா ஆனேன், வைரவிக் கிழவன், பிரேத வண்டிலும் தலித் சமூகமும், உங்களுக்கு கிளாஸ் இல்லை- சிரட்டைதான், 1973இல் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் நடந்த சம்பவம், தோழர் கே.டானியல், பொலிஸ் என்னை சாதி சொல்லி பேசினான், தோழர் மாதகல் வ.கந்தசாமி, நினைவுடன், சீனியப்பு, கலைஞர்களின் நடிப்பும் சாதி வெறியர்களின் தடிப்பும், தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் (இசை வேளாளர்கள்), யாழ் இரசிக ரஞ்சன சபையும் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பாவும், முடிவாக, திரைகடல் ஓடி, நிகழ்ந்த சாதிய ஒடுக்குமுறைகளின் சிறு துளிகள் ஆகிய அத்தியாயங்களின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எமது பண்பாட்டுக் கலாசார விழுமியங்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் சாதியமானது தலைதூக்கும் தருணங்களை ஒவ்வொரு தலைப்பும் பதிவுசெய்கின்றது. தோழர் யோகரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் கிராமத்திலுள்ள கல்வளை கேணிக்கட்டு என்னும் குறிச்சியில் இராமன்-அன்னம் தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக 01.03.1952இல் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே சமூக-அரசியலில் ஈடுபாடும் அவதானிப்பும் கொண்டிருந்தவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.