10209 அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்.

எம்.எம்.எம்.நூறுல்ஹக். சாய்ந்தமருது 05: மருதம் கலை இலக்கிய வட்டம், 129B, ஒஸ்மன் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கல்முனை: அல்நூர் பதிப்பகம்).

(16), 17-128 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-50248-01-5.

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான நூலாசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு இது. 1981இல் எழுத்துத்துறையில் நுழைந்த இவர், அரசியல், சமயம், விமர்சனம், இலக்கியம் எனப் பல்வேறு தளங்களிலும் பிரபல்யமானவர். 2010இல் இவர் எழுதிய 14 கட்டுரைகள் உள்ளிட்ட 18 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை பூர்வீகம், அல்லது காணிப்பறிப்பு, முஸ்லிம்களுக்கான தனியானதொரு கட்சி, தேர்தல் முறை, தமிழ்-முஸ்லிம் உறவுநிலை என இக்கட்டுரைகளின் உள்ளடக்கத்தை வகுக்கலாம். முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இக்கட்டுரைகள் அமைகின்றன. தன் சமூகத்திற்கு எது நல்லதென்று கருதினாரோ அக்கருத்திற்கு வலுவூட்டும் வகையில் கட்டுரைகளைப் படைத்துள்ள ஆசிரியர் தான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தின் சிந்தனை விரிவாக்கத்துக்குத் தன் பங்களிப்பினை இந்நூல் வாயிலாக வழங்கியிருக்கிறார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 177930). 

ஏனைய பதிவுகள்

$1 Free Spins & Bonuses 2024

Content Play Golden Ticket slot online no download: ❓PlayOJO Casino FAQ Typical Totally free Spins Offers 🎰 Discover Which Slots are available and select Wisely