ஆர். பிரேமதாச. கொழும்பு: ஜனாதிபதி ஊடகச் செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு).
87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. 1990 பெப்ரவரி 14ஆந் திகதி ஜனாதிபதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது, அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாசா அவர்கள் ஆற்றிய உரையின் மும்மொழிவடிவம் இது. இளைஞர்கள் பற்றிய ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட சிபாரிசுகளை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றைப் பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை முடிந்தவரை விரிவாகக் கூறியிருக்கிறார்.