10222 சீனாவும் இலங்கையும்.

சி.குமாரலிங்கம். மீசாலை: சி.குமாரலிங்கம், இளைப்பாறிய வங்கி அதிகாரி, மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

xiii, 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51477-1-2.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மைக்கால அரசியலில் காணப்படும் நெருக்கமானது மக்களை சீனா பற்றிய தகவல்களை அதிகமாக நாடச்செய்துள்ளது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வங்கியாளரான சி.குமாரலிங்கம் அவர்களின் இந்நூல் சீனா பற்றிய பல்வேறு பின்புலத் தகவல்களுடன் வெளிவந்துள்ளது. இந்நூலில் இன்றைய சீனா, நேற்றைய சீனா, புராதன சீனா, சீன பெருமதிற் சுவர், சீனாவில் மத சுதந்திரம், அபி யுத்தம், சீன கம்யூனிஸ்ட் கட்சி, உலகத்திலே கார்ல் மார்க்சின் சிந்தனையை எற்றுக்கொண்ட நாடுகள், பஞ்சசீலம், தனியார் பொருளாதார பரிணாம வளர்ச்சி, சீனாவில் வறுமை, டினமையின் சதுக்கம், நீண்ட பயணம், மாசே துங் பிறந்தார், மாவோ அன்லாங், உலகப் பகழ்பெற்ற மாக்கியவாதிகள்: பிடல் காஸ்ட்ரோ, (ஹோசிமின்), எர்னஸ்டோ சே குவரா, சூ என் லாய் பெனின், லெனின், ஸ்டாலின், லூசன், சீன இலங்கை நட்புறவு, கன்பூசியஸ்- கி.மு.550-523, கார்ல் மார்க்ஸ், டெங் சியா பிங் இயாசில் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலையில் பிறந்த சின்னத்தம்பி குமாரலிங்கம் முற்போக்குச் சிந்தனையாளர். தனது வாழ்விலும், எழுத்துக்களிலும் அதனையே பிரதிபலித்து வருபவர். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 153830). 

ஏனைய பதிவுகள்

Unsere Drückglück Erfahrungen

Content Drueckglueck Spielbank Promotionen & Bedingungen Bankverbindung Auferlegen: Inside Drückglück Paypal Zahlung Gar nicht Vorstellbar Ihr Erstes Kurzes Anregung Zum Drückglück Casino Prämie Drückglück Paypal

16633 ஒரு தோட்டத்தின் கதை.

குப்பிழான் ஐ. சண்முகன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 70 பக்கம்,