செ.சந்திரசேகரம், எல்.ரெஜினோல்ட். யாழ்ப்பாணம்: அபி வெளியீட்டகம், 196/23 தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: ஜே.எம். ஓப்செற் பிறின்டேர்ஸ்).
vii, 144 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-44890-8-0.
அறிவுப் பொருளாதாரம்: அறிமுகம், தொழில்நுட்பமும் வளர்ச்சிக் கோட்பாடுகளும், மனித மூலதனமும் பொருளாதார வளர்ச்சியும், புத்தாக்க முறைமையும் பொருளாதார வளர்ச்சியும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியில் பொருளாதார மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆட்சி முறையின் வகிபங்கு ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயம் அறிவுப் பொருளாதாரத்துக்கான அறிமுகத்தினைத் தருவதுடன் அறிவுப் பொருளாதாரம் (Knowledge Economics) என்ற எண்ணக்கருவினை விளங்கிக்கொள்ளவும் பொருளாதார வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் பற்றி அறியவும் உதவுகின்றது. 2வது அத்தியாயம் கோட்பாட்டுரீதியாக தொழில்நுட்பமானது பொருளாதார வளர்ச்சியுடன் எத்தகைய தொடர்பினைக் கொண்டுள்ளது என்பதனை ஆராய்கின்றது. அத்தியாயம் மூன்று பொருளாதர வளர்ச்சியில் மனித மூலதனமானது எத்தகைய தாக்கத்தினைக் கொண்டுள்ளது என்பதனை நடைமுறையில் பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதாகவுள்ளது. 4வது அத்தியாயம் புத்தாக்கத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்கின்றது. இதுவும் நடைமுறையில் பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே ஆராய்வதாகவுள்ளது. சிறப்பாக, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் எத்தகைய தொடர்புள்ளது என்பதையும் ஆராய்கின்றது. 5வது அத்தியாயம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்கின்றது. இந்த அத்தியாயத்தில் சிறப்பாக கைப்பேசியின் பாவனைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் எத்தகைய தொடர்புள்ளது என்பதையும் இணையப் பாவனையானது பொருளாதர வளர்ச்சியுடன் கொண்டுள்ள தொடர்பு என்ன என்பதையும் ஆராய்கின்றது. இறுதி அத்தியாயமானது பொருளாதார மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆட்சிமுறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்கின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001419).