சனசக்திப் பிரிவு. கொழும்பு 1: சனசக்திப் பிரிவு, அபிவிருத்தி வங்கி அலுவல்கள் துறை, இலங்கை வங்கி, 15ம் தளம், தலைமை அலுவலகக் கட்டிடம், இல. 4, இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (கொழும்பு: சுமதி புக் பிரின்டிங்).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இலங்கை வங்கியில் நிதி உதவிபெற்றுத் தமது வாழ்க்கைப் பாதையைச் செழிப்பாக்கிக் கொண்ட சனசக்தி உதவி பெற்றோர் எழுவர் தொடர்பான நூல். சைன்ஸடன் குடியேற்றத்தில் புதியதோர் வாழ்வு (எம்.ரி.எம்.பஹார்தீன், அலவத்துக்கொடை, அக்குறணை), இஹலகொஸ்கம பாம்புக்கடி விஷ வைத்தியர் (தயா கமகே), வாழ்க்கை என்னும் புதியதோர் போர்க்களத்தில் ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் (எம்.டபிள்யூ. மர்தேலிஸ் பாஸ் உன்னஹே, பிட்டிப்பனை வடக்கு), புதியதோர் உரிமை: யுனிட் ட்ரஸ்ட் பங்குடைமையாளர் (எம்.ஐ.நஜிமுதீன், வீரச்சோலை, ஹொரவப்பொத்தான), புதுவாழ்வு பெற்ற நகை ஆபரணச் சிற்பி (பி.ஏ.குணரத்ன, லத்பதுர வதுரலிய), கரடுமுரடான வாழ்க்கைப் பாதையை வெற்றிகொள்வதற்கு புதியதோர் பாதணி (கே.எம்.திசாநாயக்க, முல்லேகம, அம்பத்தன்ன), சனசக்தியால் கிடைத்த தையல் இயந்திரத்தின் உதவியால் புது வாழ்வுகாணும் குசுமாவதி, பண்டகிரிய ஆகிய ஏழு சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டப் பயனாளர்களின் வெற்றிகரமான வாழ்வு பற்றிய அனுபவ ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.