தமிழீழ நீதி நிர்வாகத்துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.
இந்நூலில் முன்னுரை, நீதிமன்ற மொழியும் ஆவணங்களும், தமிழீழ நீதிமன்ற அமைப்பு விதிகள், தமிழீழச் சட்டக்கோவை, குற்றவியல் வழக்கு நடவடிக்கை முறைகள், குடியியல் வழக்கு நடவடிக்கை முறைகள், குடியியல் தவறும் நிவாரணங்களும், விபச்சாரம். பாலியல் வன்முறை, திருமண ஏமாற்றம், தமிழீழ குற்றப் பொறுப்புகளும் தண்டனைகளும், தமிழீழ வீதிப் போக்குவரத்து ஒழுங்குவிதிகள், தமிழீழ தொழில் நடைமுறைச் சட்டம், வழக்கு விசாரணைகளும் சட்ட அறிஞர்களின் பணியும், முக்கிய குறிப்பும் மாதிரிப் படிவங்களும் ஆகிய 15 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழீழ மக்களுக்குச் சரியான முறையில் நீதி வழங்கும் முகமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பணிப்புரையின்பேரில் தமிழீழ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விரைவாகவும், எளிதாகவும், அதிக பொருட்செலவுமின்றி கிடைக்கக்கூடிய வகையில் உறுதிப்படுத்துவதாக பல சட்டமூலங்கள் இயற்றப்பட்டன. நீதித்துறை நேரடியாக இயக்கத்தின் தலைவரின் கீழ் செயற்பட்டது. நீதித்துறையில் மாற்றங்கள் செய்தல், தண்டனைகளை மாற்றி அமைத்தல் என்பனவற்றைத் தலைவர் மட்டுமே மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.