10260 கல்வியின் சமூகவியல்.

ஜெயலட்சுமி இராசநாயகம். யாழ்ப்பாணம்: ஜே ஆர் திறன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

vi, 118 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-50805-0-7.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருமதி ஜெயலட்சுமி இராசநாயகம் அவர்களது கல்வியியல் சிந்தனைகளின் தொகுப்பாக இவ்வாய்வுநூல் அமைகின்றது. சமூகவியல் சார்ந்த கல்வியின் அடிப்படைகளை வாசகர் இலகுவில் உணர்ந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்துகின்றது. கல்வியின் சமூகவியல்-அறிமுகம், கல்வியின் சமூகவியல் – நோக்கும் போக்கும், சமுதாயத் தேவைக்கான கல்வி, சமூக நிறுவனமாகப் பாடசாலைகள், சமூகத்தில் பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள், வளர்ந்தோர் கல்வியும் சமூக மாற்றங்களும், பாடசாலைகளில் சமயக் கல்வி, கல்வியின் தனிநபர்-சமூக நோக்கங்கள், பாடசாலை மேம்பாட்டு வேலத்திட்டங்கள், பாடசாலைகளில் இணை பாடவிதான செயற்பாடுகளும் சமூக விழுமியங்களும், கல்வியும் வறுமைத் தணிப்பும் ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் மெய்யியல்துறையில்  தனது கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்திசெய்தவர். இவர் கல்வியின் அடிப்படை இலக்குகளில் ஒன்றான விழுமிய மதிப்பீடுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45984).

ஏனைய பதிவுகள்

20 Eur Bonus Ohne Einzahlung Von Deutschen Casinos

Content Maklercourtage Unter Eintragung Casino Live Spielbank Provision Verde Casino Willkommensbonuspaket Spiele Der Maklercourtage exklusive Einzahlung ist die eine richtige Aussicht, damit das neues Online