10267 நவீன பாலர் கல்விச் செல்நெறிகள்.

பாலசுப்பிரமணியம் தனபாலன். யாழ்ப்பாணம்: திருமதி கர்ணி தனபாலன், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, மார்கழி 2002. (யாழ்ப்பாணம்: கற்பக விநாயகர் அச்சகம், 295/7, காங்கேசன்துறை வீதி).

(5), 111 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

நவீன பாலர் கல்விச் செல்நெறிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் பாலர் கல்வி விருத்தி, காலத்திற்கேற்ற பாலர் கலைத்திட்ட ஆக்கம், பாலர் கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலும் பிரச்சினைகளும், பாலர் கலைத்திட்ட அபிவிருத்திக்கான புதிய வழிகள், கற்றலும் பாலர்களின் கற்றலை அதிகரிக்கும் காரணிகளும், பாலர் கல்வியில் வழிகாட்டலும் ஆலோசனையும், பாலர் கல்வி எண்ணக்கரு விருத்தியில் எண்-எழுத்து, பாலர் பாடசாலை ஆசிரியர் வாண்மையும் பயிற்சியும், பாலர் ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் பிரச்சினைகளும், நவீன பாலர் கல்வி அபிவிருத்தியில் முகாமைத்துவப் பங்கு, நவீன பாலர் கல்வித்துறை விரிவாக்கல் செயன்முறை ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் நவீன பாலர் கல்வி தொடர்பான விரிவானதொரு பார்வையை வழங்குகின்றது. பா.தனபாலன் யாழ்ப்பாணம் தேசியகல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியாகப் பணியாற்றுகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 133763).  

ஏனைய பதிவுகள்