10268 பாடசாலை முகாமைத்துவம்: சமகாலத் தேவைகள்.

மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: விஸ்டம் பப்ளிஷர்ஸ், சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட்).

167 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 955-1204-02-6.

இலங்கைப் பாடசாலைகளின் முகாமைத்துவத் தேவைகள் பற்றி விரிவாகப் பேசும் நூல் இது. நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல்துறையின் தலைவராகப் பணியாற்றிய வேளையில் இந்நூல் எழுதப்பட்டது. மேலும் இந்நூல்,  பாடசாலையின் முகாமைத்துவத் தேவை, பாடசாலை முகாமைத்துவம் எண்ணக்கரு, பாடசாலை முகாமைத்துவமும் அதிபரும், கலைத்திட்ட முகாமைத்துவம், நேர முகாமைத்துவம், தகவல் முகாமைத்துவம், முரண்பாடுகளை முகாமை செய்தல், பாதிக்கப்பட்ட பாடசாலைகளை முகாமைசெய்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களை இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. நவீன ஆய்வு முகிழ்ப்புகளினூடாக மேலெழும் கல்வியியலை முன்னெடுக்கும் ஆய்வறிவாளர்களுள் மா.சின்னத்தம்பி முக்கியமானவர். சமகாலக் கல்வியியல் ஆய்வுகள் பல்வேறு அறிகைப் புலங்களை ஊடறுத்துப் புகுந்தும், ஒன்றிணைத்தும் பன்முக வளர்ச்சிகளை எய்தியுள்ள நிலையில் அவற்றுக்குத் தமிழ்வடிவம் கொடுத்து தமிழ் ஆசிரியர்கள், மற்றும் கல்வியியலாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணி இவருடையது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 196632).  

ஏனைய பதிவுகள்

hansı onlayn kazinolar

ライブカジノオンライン Ən yaxşı onlayn kazinolar Paypal 入金不要ボーナス Hansı onlayn kazinolar De acordo com o teste do FavBet cassino, uma vez que o jogador é considerado

Paris Joueurs & Salle de jeu de Pourboire

Pourtant, mien salle de jeu captive l’intégralité de traité immédiatement, pour genre qui chacun pourra aborder a jouer alors toi-même achevez un classe. Y analyserons