மலர்க்குழு. முல்லைத்தீவு: மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: எவகிறீன் பதிப்பகம், 693, கே.கே.எஸ் வீதி).
xxii, 264 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.
அமரர் மு.நேசரத்தினம் அவர்களை தாபகராகவும், முதலாவது அதிபராகவும் கொண்டு 15.01.1955இல் உருவாக்கப்பட்டதே புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியாகும். அறுபதாண்டுகளைத் தாண்டும் நிலையில் அது கடந்தவந்த பாதையை நினைவுறுத்தும் பாடசாலையின் வரலாற்றையும், அதனைக்கட்டியெழுப்பியவர்களையும் நினைவுகூரும் வகையில் இம்மலர் ஆக்கப்பட்டுள்ளது. அதிபரின் இதயத்திலிருந்து, பாடசாலையின் வரலாற்றுக் கண்ணோட்டம், மாணவர் ஊற்றுக்கள், ஆசிரியர்களின் தேடல்கள், பாடசாலையில் பயின்றோரின் சிந்தனையிலிருந்து, கடல்கடந்து வந்த கருத்தாடல்கள், மாணவர் சாதனைகள், நன்கொடைகள், மாணவர் மன்றங்கள், நன்றிப் பகிர்வு என பத்துப் பிரிவுகளிலும் அடங்கத்தக்கதாக மலரின் ஆக்கங்களின் உள்ளடக்கம் காணப்படுகின்றது.