10283 வணிகக் கல்வி -1.

இ.இரத்தினம்.  கொழும்பு 13: பேசும் பேனா வெளியீடு, 169, ஜோர்ஜ் ஆர் B சில்வா மாவத்தை, கொட்டஹென, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 13: VRGK பிரின்டர்ஸ், 169, ஜோர்ஜ் ஆர் B சில்வா மாவத்தை, கொட்டஹென).

(4), 190 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 21×14.5 சமீ.

களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் சிறப்புப் பட்டதாரியாகப் பயின்று, பின்னர் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கணக்கியல் டிப்ளோமாவை பெற்றுக்கொண்ட திரு. இ.இரட்ணம் அவர்கள் இந்நூலின் ஆசிரியர். இதில் வர்த்தகத்தின் பின்னணி, கைத்தொழில், தொழில் நிறுவன அமைப்புகள் ஆகிய பிரதான மூன்று பிரிவுகளின்கீழ் வணிகக் கல்வியின் அடிப்படைகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், அண்மையில்  கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட க.பொ.த. உயர் தர வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத் தேவைக்கேற்ப பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. பிரதான பகுதியான தொழில் நிறுவன அமைப்புக்களின் கீழ், தனி வியாபாரம், பங்குடைமை, வரையறுக்கப்பட்ட கம்பெனி, அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச கம்பனிகள், சங்க வகை நிறுவனங்கள், கூட்டுறவு ஆகிய பிரிவுகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124551).     

ஏனைய பதிவுகள்

Diamond Blitz 100 Slot Review 2024

Content Jackpot Abeloura Is Redefining Casino Gaming With Innovative – Floating Dragon Megaways Slot Machine Book Of The Fallen Almighty Jackpots Minimum And Maximum Bet

16884 நாத்து.

சுபா குருபரன் (இயற்பெயர்: சுபாஷினி குருபரநாதன்). பிரான்ஸ்: சுபாஷினி குருபரநாதன், பாரிஸ், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 164 பக்கம், புகைப்படங்கள், விலை: 9 இயூரோ, அளவு: 21.5×15 சமீ., ISBN: