10297 சாரதிகளுக்கேற்ற கைநூல்: வீதி ஒழுங்குகளும் வீதிச் சமிக்ஞைகளும்.

ஜெயசிங் ரூபராஜ் தேவதாசன். தங்கொட்டுவ: வாசனா வெளியீட்டகம், கட்டுகெந்த, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (தங்கொட்டுவ: வாசனா பதிப்பகம், கட்டுகெந்த).

48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 160., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-29-0075-4.

சாரதி அனுமதிப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்ற ஆயத்தம் செய்யும் மாணவ சாரதிகளுக்கான கைநூல். இலங்கையில் நடைமுறையிலுள்ள வீதி ஒழுங்குகளும் வீதிச் சமிக்ஞைகளும் பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் வழங்குகின்றது. நீங்கள் ஒரு சாரதியாக வேண்டுமானால், சாரதியாக ஒரு வாகனத்தை ஓட்டிச் செல்வதற்கு முன்னர் கட்டாயமாகக் கவனிக்கவேண்டிய சில விடயங்கள், நீங்கள் வாகனத்தைச் செலுத்துகையில், நீங்கள் சந்திப்பொன்றைக் கடக்கையில் செயற்பட வேண்டிய விதம், உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லவேண்டிய விதம், உங்கள் வாகனத்தை பாதையில் நிறுத்துகையில், சாரதிகளும் பாதசாரிகளும் தெரிந்துகொள்ள வேண்டிய வீதிச் சமிக்ஞைகள், வாகனமொன்று பின்னால் செல்கையில் அல்லது இடைபாதையொன்றிலிருந்து பிரதான பாதைக்குள் பிரவேசிக்கும்போது, அவசர நிலைமை அல்லது திடீர் விபத்தின்போது, சாரதிகள் செய்யும் தவறுகள், சைக்கிளில் செல்வோருக்கான சில ஆலோசனை வழிகாட்டிகள், பாதசாரிகளுக்கான சில அறிவுறுத்தல்கள், எழுத்துப் பரீட்சைக்கான மாதிரி வினாவிடை, தொழில்நுட்ப வினாக்கள் என 14 தலைப்புகளில் இந்நூல் விரிவான தகவல்களை வழங்குகின்றது. இந்நூலுக்கான பதிப்புரிமை பி.எம்.நிஹால் ரஞ்சித் குமார என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 176288). 

ஏனைய பதிவுகள்

Plinko Salle de jeu

Aisé Meilleurs Salle de jeu Un brin Pour Conserve Mini Avec dix, : Vidéo Soirée pour Devinette Nos Casinos Du Appoint Profond Dans Bien Amuser