எஸ். முத்துமீரான். நிந்தவூர் 12: மீரா உம்மா வெளியீட்டகம், இல.77, 2ம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மருதமுனை: அப்னா பிரின்ட்).
142 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-8281-06-2.
முஸ்லிம் மக்களிடையே வழங்கும் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தைக் காண முயலும் ஆசிரியர், அரேபியாவிலிருந்து வந்த பட்டாணியர்கள் தமது கப்பல் தரைதட்டியதால் காத்தான்குடியில் தங்கிவிட்டனர் என்கிறார். கலிங்க மன்னரால் முத்துக்குளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட முக்குவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் குடியேறியதாகக் குறிப்பிடுகிறார். மேலும் மட்டக்களப்பில் ஏற்கெனவே இருந்த திமிலர்களுக்கும் முக்குவர்களுக்குமிடையே சண்டை மூள பட்டாணியரின் உதவியுடன் முக்குவர் வென்றதாகக் குறிப்பிடுகிறார். கரையோர முஸ்லீம்களை போர்த்துக்கேயர் விரட்டியடிக்க அவர்களுக்குக் கண்டி மன்னன் செனரத் தஞ்சமளித்து மட்டக்களப்பு மண்முனைப் பிரதேசத்தில் குடியேற்றியதாகவும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு முஸ்லீம்களின் பூர்வீகக் குடியேற்றம் ஆசிரியரால் விபரிக்கப்படுகின்றது. அக்கால முஸ்லிம்களின் தொழில்கள், உணவுவகைகள், திருமணச்சடங்குமுறைகள், வீட்டின் அமைப்பு, பாவனைப் பொருட்கள், உடைவகைகள் எல்லாவற்றையும் ஆய்வின் வாயிலாகத் தேடிஎடுத்துத் தருகிறார்.