10311 தொன்னூறு நாட்களில் பேச்சு சிங்களம்.

எல்.என்.புளத் சிங்கள, பெனிட்டா அந்தனி, பொன் சக்திவேல். கொழும்பு 11: பிரைட் புக் சென்டர், எஸ் – 27, முதலாம் மாடி, த.பெ.எண். 162, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைக் கட்டடத் தொகுதி, 4வது பதிப்பு, மார்ச் 1997, 3வது பதிப்பு, செப்டெம்பர் 1996, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1995, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: Luxmi Printer, 195, Wolfendhal Street).

87 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 25.5×18.5 சமீ., ISBN: 955-9387-18-9.

கல்வி அமைச்சினால் அமுலாக்கப்படும் புதிய மாற்றத்திற்கிணங்க, சிங்களவர்கள் தமிழ் மொழியையும் தமிழர் சிங்களத்தையும் பாடசாலையில் இருந்தே கற்கவேண்டும் என்ற திட்டத்திற்கிணங்க பாடசாலை மாணவர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிங்கள மொழியை அன்றாட வாழ்வில் பேசுவதற்கேற்ப தேவையான வார்த்தைகளை உள்ளடக்கிய அடிப்படைக் கற்றல் பொறிமுறையொன்றினை இந்நூல் தமிழ் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120166).  

ஏனைய பதிவுகள்