10317 இனிக்காதா இலக்கணம்?

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 292 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-452-2.

லண்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றும் ஆசிரியரின் தமிழ் இலக்கணச் சிந்தனைகள் அவ்வப்போது புகலிட ஊடகங்களில் வெளிவந்தவண்ணமிருந்தன. இந்நூல் அவற்றின் தேர்ந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோரின் பிள்ளைகளுக்கென்று எழுதப்பட்ட Tamil Through English என்ற நூலின் ஒரு பகுதியாக இந்நூல் அமைகின்றது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சிறாரின் வசதிக்காக ஆசிரியர் ஆங்காங்கே ஆங்கில மொழியையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் படித்துத் தேர்வு எழுதுகின்ற மாணவர்க்கு முதலாம் பாகத்தில் உள்ள பாடங்கள் பயனுள்ளவை. இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்துகின்ற உயர்தரத் தமிழ்ப் பாடத் தேர்வுக்குத் தோன்ற எண்ணுகின்ற மாணவர்களுக்கு இரண்டாம் பாகத்திலுள்ள பாடங்கள் பயனுள்ளவை.

ஏனைய பதிவுகள்