புத்தொளி ந.சிவபாதம் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: தமயந்தி பதிப்பகம், 1வது பதிப்பு, ஆவணி 1974. (அச்சுவேலி: சிவகுமாரன் அச்சகம்).
60 பக்கம், விலை: ரூபா 2.25, அளவு: 21×14 சமீ.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, செந்தமிழ்மணி பொ.கிருஷ்ணபிள்ளை, ஆத்மஜோதி நா.முத்தையா, புத்தொளி ந.சிவபாதம், மாத்தளை அருணேசர், டி.சீனிவாசராகவன், என்.சிறீதரன், பெ.தூரன், அகிலன், சிற்பி ஆகியோரின் தேர்ந்த கட்டுரைகளை மாணவர்களுக்கேற்ற விதத்தில் உள்ளடக்கியுள்ளது. வள்ளுவர் வானுயர் கருத்து, காலத்தை வெல்லும் இலக்கியம், மக்கள் ஆட்சி, மகாவலி நீர்த்திருப்பம், சமயக் கல்வி, தேசாந்த யாத்திரையின் பயன், விஞ்ஞானத்தின் முடிவு, நாவலர் தந்த தமிழ், ஐந்தாண்டுத் திட்டம், சிறு கதை, நான் விரும்பும் பெரியார் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34330).