10322 கட்டுரைக் கதிர்:தரம் 4-5.

யசோதா பாஸ்கரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

50 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ.

நான்காம் ஐந்தாம் தரங்களில் கற்போர்க்கும் கல்வி அமைச்சு நடத்தும் புலமைப்பரிசில் பரீட்சை, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் சேர்வதற்கான பிரவேசப் பரீட்சை ஆகியவற்றுக்குத் தோற்றுவோர்க்கும் பயன்படும் வகையில் ஆக்கப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு. சிறார்களின் சிந்தனை விருத்திக்கும் மொழித்திறன் விருத்திக்கும் துணைபுரியும் வகையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, எனது அம்மா, எனது செல்லப்பிராணி, சந்தையில் ஒரு பகல்பொழுது, தொலைக்காட்சி என நாற்பது சிறு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29831).

ஏனைய பதிவுகள்