நவாலியூர் சோ.இளமுருகனார். யாழ்ப்பாணம்: சோ.இளமுருகனார், நவாலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ.
இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழ்மலர் பாடநூல் வரிசையில் ஒன்பதாந் தமிழ் மலரைப்பற்றி பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் முன்வைத்திருந்த இலக்கணப் பிழைகள் பற்றிய குற்றச்சாட்டுக்குப் பதில் வழங்கும் வகையில் எதிர்க் கருத்துக்களுடன் எழுதப்பட்ட சிறு பிரசுரம் இது. இந்நூலில் சுவையான இலக்கண விவாதத்தை முன்வைக்கும் நவாலியூர் சோ.இளமுருகனார் S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியின்போது ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை அமுல்படுத்தவதற்கு முனைந்திருந்த வேளையில் வெகுண்டெழுந்து, தமிழின் பெருமையை அவருக்கும் அவரது சகபாடிகளுக்கும் புரியவைக்கவேண்டும் என்ற நோக்கில் செந்தமிழ்ச் செல்வம் என்ற நூலை 1957இல் வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (பாராளுமன்ற உறுப்பினர் (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2588).