ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 6வது பதிப்பு, ஆவணி 1954. முதற்பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச யந்திரசாலை).
144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் எட்டாவது பிரசுரம். கடவுள் வழிபாடு, கும்பகர்ணன், செல்வம், கும்பகர்ணன் போர்க்கேகுதல், சின்னத்தம்பிப் புலவர், தீமை செய்தார்க்கு நன்மை செய்தல், பூர்வ இந்திய மகளிரும் கற்றவர்களே, லப்தஹானி, ஆரணிய காண்டம் -1, ஆரணிய காண்டம் -2, அன்பு ஆகிய 11 பாடங்களை முதலாம் பிரிவில் கொண்டுள்ள இந்நூல், தொடர்ந்து வரும் செய்யுட்பாகத்தில் நீதிக் கவித் திரட்டு, ஆசாரக் கோவை, வில்லி பாரதம், அடியவர்க்கெளியார் மண் சுமந்தமை ஆகிய நான்கு பாடங்களையும் அரும்பத விளக்கத்தையும் கொண்டுள்ளது. இச்செய்யுட்களுக்கான உரைநடைப் பாகம் இறுதியாக இடம்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118821).